\
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்
Published on: 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சில தினங்களுக்கு முன் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 18 பேர் மீது சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வரும் 31 ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நடைபெறவிருப்பதால், அன்றே ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், முன் ஜாமீன் கோர முடியாது, நேரடியாக ஜாமீன் கோரியே மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com