பெங்களூரு சிறையில் சசிகலா உள்ள காட்சிகள் என வெளியான படங்கள் கிராபிக்ஸ் மூலம் மாற்றியமைக்கப்பட்டவை எனவும் அந்தக் காட்சிகள் பாகுபலி பட கிராபிக்ஸை மிஞ்சும் வகையில் இருப்பதாகவும் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணிச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பல்வேறு வசதிகளுடன் சசிகலா சுதந்திரமாக இருப்பது போன்று வீடியோ காட்சிகளை கர்நாடக ஊடகங்கள் இன்று வெளியிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில அதிமுக அம்மா அணிச் செயலாளர் புகழேந்தி, ஊடகங்களில் வெளியாகியுள்ளது பாகுபலி படத்தை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளாக இருப்பதாக கூறினார். மேலும் அந்த காட்சிகள் உண்மையில்லை எனக் கூறிய அவர், திட்டமிட்டு இவ்வாறான காட்சிகள் பரபரப்படுவதாக கூறினார்.