பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு: முக்கிய முடிவுகள் வெளிவர வாய்ப்பு
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக பாடுபடுவதாக மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?, கட்சிக்கு ஒற்றைத் தலைமையா ?! 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர். அமைச்சர் நிலோஃபர் கபிலும் முதலமைச்சரைச் சந்தித்துள்ளார்.

அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் சந்தித்தார். மேலும், சென்னையில் உள்ள முக்கியமான கோவில் இருந்து சிறப்பு பூஜை செய்த பிரசாதமும் துணை முதல்வருக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com