\
இன்று மாலை வெளியாகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!

இன்று மாலை வெளியாகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!

இன்று மாலை வெளியாகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!
Published on

அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாக உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதன் படி நேற்று முன் தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், நேற்று திராவிட முன்னேற்ற கழகமும் அவர்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஆளும் கட்சியான அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர். முன்னதாக அதிமுக தரப்பில் இருந்து மாதம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1500 ரூபாயும், வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கையை 12 பேர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தயார் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com