அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு என்னென்ன இடங்கள் ? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு என்னென்ன இடங்கள் ? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு என்னென்ன இடங்கள் ? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த தகவல் இன்று வெளியாகும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதி, பாஜகவுக்கு 5 தொகுதி மற்றும் தேமுதிகவுக்கு 4 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் 7 இடங்கள் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 இடங்களில் போட்டியிடவுள்ள பாரதிய ஜனதாவுக்கு கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு வடசென்னை‌, கள்ளக்குறிச்சி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

தென்காசி தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும், வேலூரை புதிய நீதிக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி‌ தொகுதி என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு உறுதியான நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில் ‌இணைந்தால் மயிலாடுதுறை தொகுதி வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இன்று மாலைக்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகாவின் தலைவர் ஜி.கே.வாசனை, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், நாட்டு நலன் சார்ந்த வளர்ச்சி குறித்து ஆலோசித்து இன்று கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட இருப்பதாகக் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com