\
உதயநிதி ஸ்டாலின் மீது மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்

உதயநிதி ஸ்டாலின் மீது மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்

உதயநிதி ஸ்டாலின் மீது மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்
Published on

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

எந்தக் கட்சியும் சாலையில் பொதுமக்களை கூட்டி கூட்டம் நடத்துவதற்கும், பேரணி நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்துவதற்கும் மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் கடந்த 9-ஆம் தேதி திருச்சி மற்றும் கரூரிலும்,10 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் தேர்தல் விதிகளை மீறி நூற்றுக்கணக்கான மக்களை நெடுஞ்சாலையில் கூட்டி சட்டத்தை மீறி உள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com