\
தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரித்த கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்

தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரித்த கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்

தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரித்த கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
Published on

மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் தொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியை கைபற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக களம் இறங்கி உள்ளது. உள்ளுர் வேட்பாளரான பொன்.ஜெயசீலனை களமிறக்கி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அவரும் பல பகுதிகளுக்குச் சென்று மக்களை பல்வேறு விதங்களில் கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர், மேல் கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மற்றும் பெண்கள் உற்சாக நடமாடி அவரை வரவேற்றனர். ஒரு கட்டத்தில் வேட்பாளர் பொன்.ஜெயசீலனும் அவர்களோடு நடனமாடி வாக்கு சேகரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com