டிரெண்டிங்
ரஜினியுடன் அதிமுக கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
ரஜினியுடன் அதிமுக கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் அரசை, ரஜினி பாராட்டி இருப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் புதியதலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது “ ரஜினி அரசை பாராட்டுவது நல்ல விஷயம்தான். அதனால் ரஜினிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதம், சாதி, மொழியால் மக்களை பிரித்து அரசியல் செய்யும் முயற்சியை மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டார்கள்.
மேலும் அதிமுக-ரஜினி இடையே சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்க எனது வாழ்த்துகள். ரஜினி உடனான அதிமுக கூட்டணி குறித்து நான் முடிவு செய்ய முடியாது. அதனை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.