புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி - இரட்டை இலையில் போட்டி

புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி - இரட்டை இலையில் போட்டி

புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி - இரட்டை இலையில் போட்டி
Published on

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக-புதிய நீதிக் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொகுதி உடன்பாட்டை வாசித்த துணை முதல்வர் ஓபிஎஸ், புதிய நீதிக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்தார். 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் ஓபிஎஸ் கூறினார். 

கூட்டணி குறித்து பேசிய புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், “என் தாய் வீட்டில் கிடைத்த சீதனமாக இந்த ஒரு தொகுதியை கருதுகிறேன். என் தாய் வீட்டிற்கு வந்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு தந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு நன்றி. அதிமுகவினால் வழிநடத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். இடைத்தேர்தல்களில் அதிமுகவின் பொறுப்பாளராக இருந்து நான் பணியாற்றியுள்ளேன்” என்று கூறினேன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com