எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அதிமுக 46வது விழா

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அதிமுக 46வது விழா

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அதிமுக 46வது விழா
Published on

ராமாவரம் தோட்டத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் 46வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என்று  துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇஅதிமுக'வின் 46வது ஆண்டு விழா எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் 24.10.2017 அன்று கொண்டாடப்படும் என்றும் அதையொட்டி காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் தங்கள் சுயநலத்துக்காக கரம் கோர்த்து கொண்டு துரோகக் கும்பல் இன்று தலைமை கழகத்தை ஆக்ரமித்து கொண்டு நடத்துகிற நிகழ்வுகள் கோடான கோடி தொண்டர்களுக்கு மன வேதனை அளித்துள்ளது. எனினும் பகையை வென்று காட்டுவோம் என்றும் தினகரன் அந்த அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com