தையல் மெஷின் தருவதாக பிரதமர் பெயரில் போலி திட்டம் : பணம் கொள்ளை!

தையல் மெஷின் தருவதாக பிரதமர் பெயரில் போலி திட்டம் : பணம் கொள்ளை!
தையல் மெஷின் தருவதாக பிரதமர் பெயரில் போலி திட்டம் :  பணம் கொள்ளை!

பிரதமர் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களை வழங்குவதாகக் கூறி, மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபகரித்த ஒருவரை அகமதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.


அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர்  சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தையல் இயந்திரத்தின் புகைப்படம் வந்ததாகவும், அந்த தையல் இயந்திரம் பிரதமர் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுவதாகவும்,  அந்த தையல் இயந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கியில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்றும் வங்கிக் கணக்கு விவரங்களை இதே எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து தனது வங்கிக்கணக்கு விவரங்களை அந்த நபருக்கு அனுப்பிய பின்னர், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20,000 அபகரிக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீசார் பருச் பகுதியில் வசித்து வந்த 33 வயதான டிராஜ் பிரஜாபதி என்பவரை கைது செய்துள்ளனர். இவரின் மேல் இதே போன்று 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது உறவினர் ஷைலேஷ் பிரஜாபதியும் சைபர் குற்றச்சாட்டுகளால் சிறை தண்டனை அனுபவித்து வருவதும்  கவனிக்கத்தக்க ஒன்று. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com