“வாக்கு இயந்திர மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்”- சத்யபிரதா சாஹூ
வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ஆவணங்களை நகல் எடுத்த விவகாரத்தில், கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த விவகாரத்தில் சம்பூர்ணத்திற்கு உதவியதாக இன்று காலை மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மதுரை சம்பவத்தை தொடர்ந்து சத்யபிரதா சாஹூ இதனை தெரிவித்தார்.