”பாஜகவில் இணையவில்லை; எனக்கு அரசியல் தெரியாது“ - பிரதமரை சந்தித்தது குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை சந்திப்பதற்காக பல்வேறு பிரபலங்கள் வந்திருந்த நிலையில், பிரபல நடிகர் அர்ஜுன், தனது மகளுடன் வந்திருந்தார்.

பிரதமரை சந்தித்து நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை சந்திப்பதற்காக பல்வேறு பிரபலங்கள் வந்திருந்த நிலையில், பிரபல நடிகர் அர்ஜுன், தனது மகளுடன் வந்திருந்து பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதனால், பிரதமர் மோடி முன்னிலையில், அவர் பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவின. பிரதமர் மோடி உடனான சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன், அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் தனக்கு தெரியாது என்றும், பாஜகவில் இணையும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com