\
பந்து விளையாடும் பறவைகள் - அழகிய வீடியோ!

பந்து விளையாடும் பறவைகள் - அழகிய வீடியோ!

பந்து விளையாடும் பறவைகள் - அழகிய வீடியோ!
Published on: 

மனம் சோர்வடைந்துவிட்டால் சற்றுநேரம் சுட்டிக் குழந்தைகள், அழகிய பிராணிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வரிசையில் இந்த அழகிய பறவைகளின் வீடியோ கண்டிப்பாக பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும்.

மேட் யு ஸ்மைல் என்ற டிவிட்டர் பக்கம், ’’விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், சில பறவைகள் பந்து விளையாட்டை விளையாடலாம்’’ என்ற வரிகளுடன் பகிர்ந்திருந்த வீடியோவை, இந்தியா டுடே ரீட்வீட் செய்துள்ளது.

இந்த வீடியோவில் பச்சை மற்றும் மஞ்சள்நிற பறவைகள் வலைக்கு இரண்டு பக்கமும் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. நின்றுகொண்டு வாயால் பந்தை வீசிவீசி பறக்கவிடுகின்றன. நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்துள்ள இந்த வீடியோவை 16.2 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இந்த விளையாட்டை ஒலிப்பிக்கில் சேர்க்கவேண்டும் என்பதுபோன்ற பல கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com