குட்டிக்கரணம் அடித்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்காது: ஸ்டாலின்
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவினர் என்ன வாக்குறுதிகள் கொடுத்தாலும், குட்டிக்கரணமே அடித்தாலும் அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த சதி வேலைகள் நடப்பதாக குற்றம்சாட்டினார். ஆர்.கே.நகரில் அதிமுக என்ன வாக்குறுதிகள் கொடுத்தாலும், என்ன உறுதிமொழி கொடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கரணமே அடித்தாலும் அதிமுகவினர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்றார்.
மீனவர்கள் விவகாரத்தில் காணாமல் போனவர்கள் குறித்து முறையான கணக்கு இல்லை. மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஒவ்வொரு கணக்கு கூறுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மீனவர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை போராட்டம் நடத்தவுள்ளதாகவும், தான் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஆளுநரிடம் மீனவர் பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.