\
கர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு

கர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு

கர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு
Published on

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தில் அதிமுகவின் போராட்டம் தொடரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரஃபேல் பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக எம்பிக்களின் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையின் போது யாரோ ஒரு எம்பி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பரினை தூக்கி எரிந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இருந்து அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க அதிமுக எம்.பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தில் அதிமுகவின் போராட்டம் தொடரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் கர்நாடகத்தில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகம் இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com