\
தோல்வி குறித்த அதிமுகவின் குற்றச்சாட்டு வழக்கமான புலம்பல்: விஜயகாந்த்

தோல்வி குறித்த அதிமுகவின் குற்றச்சாட்டு வழக்கமான புலம்பல்: விஜயகாந்த்

தோல்வி குறித்த அதிமுகவின் குற்றச்சாட்டு வழக்கமான புலம்பல்: விஜயகாந்த்
Published on

அதிமுகவின் இடைத்தேர்தல் தோல்விக்கு தினகரன் - திமுக கூட்டு சதியே காரணம் என அதிமுகவினர் கூறுவது வழக்கமான புலம்பல் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி மற்றும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் தினகரனின் வெற்றியால் நிரம்பியதாக திருமாவளவனின் கருத்து குறித்துப் பேசிய விஜயகாந்த், பொதுத்தேர்தலுக்கு பிறகே தெரியவரும் என்று கூறினார். தினகரன் - திமுகவின் கூட்டு சதியே தோல்விக்கு காரணம் என அதிமுக கூறியது பற்றிய கேள்விக்கு, அது வழக்கமான புலம்பல்தான் எனவும் விஜயகாந்த் பதில் அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com