புதுச்சேரி: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

புதுச்சேரி: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

புதுச்சேரி: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக
Published on

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் பங்கேற்றுள்ள அதிமுக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சு இழுபறிக்கு இடையே அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதிமுக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உப்பளம் தொகுதியில் அன்பழகனும், உருளையன்பேட்டையில் ஓம்சக்தி சேகரும், முத்தியால்பேட்டையில் வையாபுரி மணிகண்டனும், முதலியார்பேட்டையில் பாஸ்கரும், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள 4 பேருக்கும் அதிமுகவில் மீண்டும் சீட் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com