விசுவாசமின்றி பேசுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நிதியமைச்சர் ஜெயக்குமார் விசுவாசமின்றி, தான்தோன்றித்தனமாகப் பேசுகிறார் என்று நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில், அதிமுக அம்மா அணியை சேர்ந்தவரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தினகரனை சந்திக்க நாடெங்கிலும் இருந்து தொண்டர்கள் வருகின்றனர். அதிமுக டிடிவி தினகரன் தலைமையிலேயே தான் இயங்கி வருகிறது. நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மீனவர் அணி செயலாளர் பதவி கொடுத்தது சசிகலா, அமைச்சர் பதவி அளித்தது டிடிவி தினகரன், தற்போது நன்றி மறந்து பேசுகிறார். விசுவாசமின்றி, தான்தோன்றித்தனமாகப் ஜெயக்குமார் பேசுகிறார்.
ஆட்சிக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்று தினகரன் ஏற்கனவே கூறியுள்ளார். யாரையும் பணம் கொடுத்து அழைக்கும் தேவை எங்களுக்கு கிடையாது.
கமல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், கமல்ஹாசன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே பேசுகிறார். கமல்ஹாசன் அரசை விமர்சிப்பது ஒரு கலைஞனுக்கு நிகழ்ந்த சோகம் என்று தெரிவித்தார்.