\
காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா

காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா

காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்பி பதவியை அதிமுக எம்பி முத்துக்கருப்பன் இன்று ராஜினாமா செய்கிறார்.

டெல்லியில்  குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் முத்துக்கருப்பன் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருக்கிறார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் பதவி விலகத் தயாராக இருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத போது பதவி ஒரு கேடா என்றும் கேள்வி எழுப்பினார். முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்கள் என்றாலும், அவர்கள் பேசினாலும் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com