\
அதிமுக இணைப்பில் உடன்பாடு: கட்சிக்கு ஓபிஎஸ்.. ஆட்சிக்கு ஈபிஎஸ்?

அதிமுக இணைப்பில் உடன்பாடு: கட்சிக்கு ஓபிஎஸ்.. ஆட்சிக்கு ஈபிஎஸ்?

அதிமுக இணைப்பில் உடன்பாடு: கட்சிக்கு ஓபிஎஸ்.. ஆட்சிக்கு ஈபிஎஸ்?
Published on

எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராகத் தொடர்வது என்றும், கட்சியை வழிநடத்துபவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்றும் அதிமுக அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக, இரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், கட்சியை வழிநடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைப்பது எனவும், அதற்குத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. துணைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். எஞ்சிய 5 பேரில் 3 பேர் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்தும், 2 பேர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தும் இடம்பெறுவர் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com