தேனி: ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் சொந்த வார்டில் தோல்வியடைந்த அதிமுக!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் சொந்த வார்டில் அதிமுக தோல்வியடைந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை 21வது வார்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வசித்து வரும் நிலையில் அந்த வார்டில் அதிமுக வேட்பாளர் மஞ்சளா முருகன் தோல்வி அடைந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 21, வார்டில் குடியிருக்கும் முன்னாள் முதல்வர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது சொந்த வார்டில் வாக்களித்தும் அதிமுக வேட்பாளர் மஞ்சுளா தோல்வியடைந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் வசிக்கும் அவரது சொந்த வார்டில், அதிமுக தோல்வியடைந்ததுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை 21வது வார்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரியகுளத்தில் உள்ள இருபத்திமூன்றாம் வார்டுக்கு உட்பட்ட செவன்த் டே பள்ளியில் வாக்களித்திருந்தனர்.இந்நிலையில் தற்போது அவர் வசிக்கும் வீடு மாடு மாற்றத்தால் 21 வார்டுக்கு உட்பட்டதாகிவிட்டது. இதனால் 21 வார்டுக்கு உட்பட்ட எட்வர்டு நடுநிலைப்பள்ளியில் ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.
அந்த வார்டில் அதிமுக சார்பில் மஞ்சளா முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத், மகன் விஜய பிரதீப் ஆகியோர் ஏட்வர்டு பள்ளிக்கு தங்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும், இந்த தேர்தல், "தறிகெட்டு ஓடும் திமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடுவதாக அமையும்," எனவும் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் வாக்களித்த அதிமுக வேட்பாளர் மஞ்சுளா முருகன் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஒபிஎஸ் ஆதரவு பெற்ற அதிமுக., வேட்பாளர் மஞ்சுளா முருகனை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சந்தான லட்சுமி 451 வாக்கு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

