டிரெண்டிங்
டிடிவி தினகரன் பதவியே ஒரு கேள்விக்குறிதான்: அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் பதவியே ஒரு கேள்விக்குறிதான்: அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நியமனம் என்பதே கேள்விக்குறிதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் புதிய கட்சி நிர்வாகிகளை நியமித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, "பொதுச்செயலாளர் பதவி தற்போது பிரச்னையில் உள்ளது. நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ள போது, துணை பொதுச் செயலாளர் பதவி என்பதே ஒரு கேள்விக்குறிதான். அதுவே கேள்விக்குறி என்றால், நிர்வாகிகள் நியமனம் என்பதும் கேள்விக்குறிதான்" என்று கூறினார்.

