திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.பி.!

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.பி.!
திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.பி.!

அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

அதிமுக முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளருமாக இருந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியை கட்சித் தலைமை பறித்தது. இந்தநிலையில் அதிருப்தியில் இருந்த லட்சுமணன் திமுகவில் இன்று சேர்கிறார்.

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளார். ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியபோது ஆதரவு தெரிவித்த முன்னணி எம்பிகளில் இவரும் ஒருவர்.

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இப்போதிலிருந்தே கட்சிகள் தங்கள் பலத்தை திடப்படுத்திக்கொள்ள பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றன. பலர் கட்சி விட்டு கட்சியும் மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com