டிரெண்டிங்
அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின்: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின்: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இலவச பேருந்து சலுகை, அம்மா வாஷிங் மெஷின் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதியோர் உதவித்தொகை 1000 லிருந்து 2000 ஆக உயர்வு, கல்விக்கடன் தள்ளுபடி, வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.