டிரெண்டிங்
“ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார்.. பாஜகவுடன் கூட்டணி கிடையாது”: செல்லூர் ராஜூ
“ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார்.. பாஜகவுடன் கூட்டணி கிடையாது”: செல்லூர் ராஜூ
மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு ஒரே ஒரு முறை தவறுசெய்து விட்டோம். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறோம் என ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். இனிமேல், அதிமுக வரலாற்றில் பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா ஒரு காலத்திலும் மதவாத கட்சிகளுடன் இணைந்து கொள்ள தயாராக இல்லை. தமிழகத்தை பொறுத்தவை நாங்கள் மதச்சார்பற்ற அணி. ஜெயலலிதாவின் விருப்பம்தான் அதிமுக நிர்வாகிகளின் விருப்பம்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.