திமுக - அதிமுகவில் களமிறக்கப்பட்ட அரசியல் வாரிசுகள் !

திமுக - அதிமுகவில் களமிறக்கப்பட்ட அரசியல் வாரிசுகள் !
திமுக - அதிமுகவில் களமிறக்கப்பட்ட அரசியல் வாரிசுகள் !

திமுகவை தொடர்ந்து அதிமுக வெளியிட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களில் வாரிசுகள் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து அதிமுகவிலும் அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, திருவள்ளூர்(தனி), சென்னை தெற்கு, காஞ்சிபுரம் (தனி), திருவண்ணாமலை, ஆரணி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

இதேபோல் திமுக தலைமையிலான கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் திமுகவில் வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள் என பேசப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது வாரிசு அரசியலை விமர்சித்து வந்த அதிமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கியுள்ளது.

அதன்படி கரூரில் மீண்டும் தம்பிதுரை போட்டியிடுகிறார். தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கும் தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமியும் திருநெல்வேலியில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியனும் களமிறக்கப்பட்டுள்ளனர். மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் களமிறக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி,  வேலூரில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கொளதம் சிகாமணி, தூத்துக்குடியில் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனிடையே அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com