புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு : ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு : ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு : ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
Published on

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த சிலை மீது மர்ம நபர்கள் காவித்துண்டு ஒன்றை போர்த்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் எம்.ஜி.ஆர் சிலை உள்ள இடத்திற்கு வந்தஎம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com