சிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி?: மதுசூதனன் பேச்சு!

சிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி?: மதுசூதனன் பேச்சு!

சிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி?: மதுசூதனன் பேச்சு!
Published on

ஒருகாலத்தில் சிகெரெட் வாங்கவே காசு இல்லாத டிடிவி தினகரனுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று ஆர்.கே.நகரின் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் மதுசூதனன், “சசிகலா மற்றும் தினகரனை இறுதிவரை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை. இரட்டை இலையை மீட்கப் போவதாக கூறும் தினகரன் முதலில் அவரை வழக்கில் இருந்து மீட்டுக்கொள்ளட்டும். தினகரன் மீது எத்தனை வழக்குகள் ஒன்றா? இரண்டா? சொல்லிக்கொண்டே போகலாம். அது எத்தனை என எனக்குத் தெரியாது, மைத்ரேயனுக்கு தான் அது நன்றாகத் தெரியும். காரணம் என்னவென்றால், நான் தினகரனை மனிதன் என்றே கருதுவதில்லை” என்றார்.

மேலும், “ஒரு காலத்தில் சிகெரெட் வாங்கக் கூட வழியில்லாத தினகரனுக்கு இன்று எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது. ஜெயலலிதாவை ஏமாற்றி, அவரது பதவியை பயன்படுத்தி கொள்ளையடித்த கூட்டம்தான் சசிகலா, தினகரன் குடும்பம்” என்று கடுமையாக சாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com