ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் கொசு மருந்து அடித்து வாக்கு சேகரித்தார்.
புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 11ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கபில்தேவ், சாக்கடை வடிகால்களில் ஸ்பிரேயர் மூலம் கொசு மருந்து அடித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வார்டுகளில் உள்ள முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும், குடிநீர் குழாய்களில் சென்சார் பொருத்தி குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.