“11 முதல் வேட்பாளர் நேர்காணல்” - அதிமுக அறிவிப்பு

“11 முதல் வேட்பாளர் நேர்காணல்” - அதிமுக அறிவிப்பு

“11 முதல் வேட்பாளர் நேர்காணல்” - அதிமுக அறிவிப்பு
Published on

மக்களவைத் தேர்தலுக்கு விருப்ப மனு அளித்த அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் 11 ஆம் தேதி தொடங்கும் என அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கு 11 ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரி நீங்கலாக 39 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது. 11 ஆம் தேதி 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் 12 ஆம் தேதி 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கும் பிற்பகல் 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கும் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com