\
தாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு

தாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு

தாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு
Published on

தாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும் என்று அதிமுக சூலூர் தொகுதி எல்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளார். 

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் கட்சியினர் பலரும் கூறுகின்றனர். வரும் தேர்தல்களில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என பலரும் உறுதிபட கூறுகின்றன. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார். அதிமுக பாஜக உடன் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பதில் தவறும் இல்லை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

இந்நிலையில், தாமரையுடன் இரட்டை இலை இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று எல்.எல்.ஏ. கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் பேசிய அவர் தாமரையுடன் இரட்டை இலை இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என  என நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com