\
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: டிடிவி தினகரன் வெளியிட்டார்
Published on

அதிமுக அம்மா அணியின் சார்பில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன், பி.பழனியப்பன், சேலஞ்சர் துரை, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.ஆதித்தன், சாருபாலா தொண்டைமான், காமராஜ், மாணிக்கராஜா,  டி.கே.எம்.சின்னையா, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.மனோகரன். எஸ்.டி.ஜக்கையன், மேலூர் ஆர்.சாமி, சி.சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இணைச்செயலாளர்களாக நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com