அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: தலைமையகத்தில் கொண்டாட்டம்

அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: தலைமையகத்தில் கொண்டாட்டம்
அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: தலைமையகத்தில் கொண்டாட்டம்

அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு, கட்சி அலுவலக வளாகத்தில் அதிமுகவின் கொடியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com