டிரெண்டிங்
ரோஜாவுக்கு போட்டியாக களமிறங்குகிறார் வாணி விஸ்வநாத்!
ரோஜாவுக்கு போட்டியாக களமிறங்குகிறார் வாணி விஸ்வநாத்!
நடிகை ரோஜாவிற்கு போட்டியாக, நடிகை வாணி விஸ்வநாத் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளார்.
நகரி தொகுதி எம்.எல்.ஏவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவருமான நடிகை ரோஜா, பொதுக் கூட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சியையும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நடிகை என்பதால் அவருக்கு கூட்டம் கூடுகிறது. இதை சமாளிக்க, நடிகை வாணி விஸ்வநாத்தை கட்சியில் சேர்க்க, தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தக் கட்சியினர் சென்னையில் அவரை சந்தித்து பேசியுள்ளனர். கட்சியில் சேர, வாணி விஸ்வநாத்தும் சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர உள்ளார்.