\
“அனைவரும் வாக்களியுங்கள்”- வாக்களித்த பின் குஷ்பு பேட்டி

“அனைவரும் வாக்களியுங்கள்”- வாக்களித்த பின் குஷ்பு பேட்டி

“அனைவரும் வாக்களியுங்கள்”- வாக்களித்த பின் குஷ்பு பேட்டி
Published on

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளி வார்டு எண் 126ல் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்கலாம்: சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க்குடன் வந்து வாக்களித்த விஜய்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com