டிரெண்டிங்
முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!
முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார். மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கேளிக்கை வரி குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் திரைப்படம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, அப்படம் வெளியாதற்கு சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.