டிரெண்டிங்
ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினியால் மட்டுமே தர முடியும்: அர்ஜுன் சம்பத்
ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினியால் மட்டுமே தர முடியும்: அர்ஜுன் சம்பத்
ரஜினியால் மட்டும்தான் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தைத் தர முடியும் என காரைக்குடியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நதிநீர் இணைப்பு என்பதை, நடிகர் ரஜினிகாந்தால் மட்டுமே நடைமுறைபடுத்த முடியும். ரஜினியால்தான் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை கொடுக்க முடியும். நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி, தனது அரசியல் பிரவேசத்திற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், ஒட்டு மொத்த தமிழகமும் ரஜினிகாந்த் பின்னால் நிற்கும். விவேகானந்தர் பிறந்த நாள் அன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும். அந்நாளை தமிழகத்திற்கு விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.