உங்கள் நாளை உந்தித்தள்ள நடிகர் பங்கஜ் திரிபாதி கொடுத்த ப்ரோ லெவல் அட்வைஸ் இதோ!

உங்கள் நாளை உந்தித்தள்ள நடிகர் பங்கஜ் திரிபாதி கொடுத்த ப்ரோ லெவல் அட்வைஸ் இதோ!
உங்கள் நாளை உந்தித்தள்ள நடிகர் பங்கஜ் திரிபாதி கொடுத்த ப்ரோ லெவல் அட்வைஸ் இதோ!

விரலுக்கு ஏற்ற வீக்கம், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு போன்ற பல சொற்றொடர்கள் தமிழில் இருப்பதை அறிந்திருப்போம். அந்த வகையில் இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியிருக்கும் ஒரு வாழ்க்கை தத்துவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரி திபான்ஷு கப்ரா நடிகர் பங்கஞ் திரிபாதி இந்தியில் பேசியிருந்த வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்திருக்கிறார். அதில் குறைந்த அளவிலான சலுகைகளை கொண்டிருக்கும் போது மக்கள் எந்த அளவுக்கு வலிமையானவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து பங்கஜ் திரிபாதி கூறியிருக்கிறார்.

அதன்படி, “ஆற்றின் மீது பாலங்கள் ஏதும் இல்லாத போது ஒரு நபர் எப்படியாவது நீச்சல் அடிக்கக் கற்றுக் கொள்வார் என்பது நான் எப்போதுவும் கூறுவதுண்டு. ஏனெனில் தனக்கு குறைவான சலுகைகளோ, வசதிகளோ கிட்டவில்லை என எவரும் மனச்சோர்வடைந்திடக் கூடாது. அந்த சூழ்நிலைகள் உங்களை வலிமையானவர்களாக, நல்ல மனிதராக உருவாக்கக் கூடும் என்பதை உணருங்கள்” என பங்கஜ் திரிபாதி பேசியிருக்கிறார்.

இதனை பகிர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கப்ரா, “இது மிக முக்கியமான புரிந்துக்கொள்ள வேண்டியதாகவும், ஆழமான செய்தியாகவும் இருக்கிறது” என கேப்ஷன் இட்டுள்ளார். இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும் பங்கஜ் திரிபாதி பேசியதை ஆமோதித்து அதனை பகிர்ந்து வருகிறார்கள். இதுவரையில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com