உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே டெங்கு பாதிப்பு அதிகரிக்க காரணம்: மயில்சாமி
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே டெங்கு பாதிப்பு அதிகரிக்க காரணம் என நடிகர் மயில்சாமி கூறியுள்ளார். தனது நண்பர்களுடன் சென்னை மயிலாப்பூரில் வீதி வீதியாக சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் நடிகர் மயில்சாமி விநியோகம் செய்தார். மக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும் என கூறிய அவர் தினம் தினம் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தத்தை அளிப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர், " நீட் குறித்து எப்படி ஆசிரியர்களுக்கு தெரியவில்லையோ அதைப்போலத் தான் டெங்கு குறித்து பல மருத்துவர்களுக்கு தெரியவில்லை. நாளுக்கு நாள் டெங்குவுக்கு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. பொதுமக்களாகிய நீங்களும் மற்றவருக்கு நிலவேம்பு கொடுங்கள். டெங்குவை தடுக்கலாம்" என்றார்.