\
கமலின் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம்

கமலின் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம்

கமலின் கட்சி பெயர் மக்கள் நீதி மய்யம்
Published on: 

மதுரை மாநாட்டில் கட்சிக் கொடியேற்றிய கமல்ஹாசன், கட்சிப்பெயரையும் அறிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதை முன்னிட்டு இன்று காலை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்தார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும், அவரது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில், உரையாற்றி வருகிறார்.

முன்னதாக கட்சிக் கொடியை ஏற்றிய அவர், கட்சிப் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி கமல்ஹாசனின் கட்சிப் பெயர் “மக்கள் நீதி மய்யம்” என தெரிவித்தார். அவரது கொடி வெள்ளை நிறத்தில் உள்ளது. அதில் 6 இணைந்த கைகள் உள்ளன. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கருப்பு நிற வளையம் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com