\
ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Published on

நடிகர் ரஜினியின் அரசியல் வருகைக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அரசியலுக்கு வரஉள்ளதாக ரஜினி அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக” என தெரிவித்துள்ளார். அரசின் குறைகளை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com