
தன் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கி டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், தன் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என்றும், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவித்தார். அதற்கான பயணம் அடுத்தமாதம் தொடங்குகிறது என்று கூரிய அவர், அடுத்த மாதம் தொடங்க உள்ள பயணத்தில் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என கூறினார்.
நாட்டில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை என்றும், அவற்றை சரிசெய்யவே தான் வந்துள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.