\
ரஜினியுடனான சந்திப்பு குறித்து பதிலளிக்க மறுத்த கமல்!

ரஜினியுடனான சந்திப்பு குறித்து பதிலளிக்க மறுத்த கமல்!

ரஜினியுடனான சந்திப்பு குறித்து பதிலளிக்க மறுத்த கமல்!
Published on: 

மலேசியாவில் நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து நடிகர் கமல் பதிலளிக்க மறுத்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பினார். முன்னதாக மலேசியா நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் நேரில் சந்தித்து பேசினர். ரஜினி அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் நிகழும் முதல் சந்திப்பு என்பதால் இது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

ஆனால் இதற்கு நடிகர் கமல் எந்த பதிலும் அளிக்கவில்லை. அரசியல்வாதியான பின்பு ரஜினியும், கமலும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com