\
நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ்-க்கு கொரோனா உறுதி

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ்-க்கு கொரோனா உறுதி

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ்-க்கு கொரோனா உறுதி
Published on

தமிழகத்தில் நடிகர் கருணாஸ் உட்பட மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸின் பாதுகாவலர் நாதன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் கருணாஸ் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதேபோன்று பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com