\
“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்
Published on: 

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் இருதொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் திமுக தோல்வியை தழுவியது. இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com