\
எடப்பாடி அணியில் ஆறுக்குட்டி இணைந்தார்

எடப்பாடி அணியில் ஆறுக்குட்டி இணைந்தார்

எடப்பாடி அணியில் ஆறுக்குட்டி இணைந்தார்
Published on


ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி அங்கிருந்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி வெளியேறினார். இந்நிலையில் இன்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் ஆறுக்குட்டி எம்எல்ஏ இணைந்தார். முன்னதாக அவர் இவ்விவகாரம் குறித்து தனது தொகுதி மக்களிடம் நேற்று கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என புகார் தெரிவித்த ஆறுக்குட்டி, தனது தொகுதிக்குட்பட்ட மாங்கரை பகுதி‌ மக்களிடம் தான் எந்த அணியில் இணையவேண்டும் என்பது குறித்து கருத்து‌களை கேட்ட பின்னரே எடப்பாடி அணியில் தற்போது இணைந்துள்ளதாக கூறினார். மேலும் மக்கள் அனைவரும் தன்னுடைய முடிவில் மிகவும் சந்தோஷமடைந்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com