உ.பி சட்டசபை தேர்தலுக்கான 100 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

உ.பி சட்டசபை தேர்தலுக்கான 100 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

உ.பி சட்டசபை தேர்தலுக்கான 100 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
Published on

வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான 100 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

நேற்று இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய் சிங், வேட்பாளர்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால் பின்னர் மாற்றப்படலாம் என்றும், இதில் 35 வேட்பாளர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.

இந்த பட்டியலில் லக்னோ, சீதாபூர், சுல்தான்பூர், பிரதாப்கர், ராம்பூர், கான்பூர், பிரயாக்ராஜ், ஹர்தோய், காஜியாபாத், ஆக்ரா, அலிகார், அமேதி, பஹ்ரைச், பாரா பாங்கி, பல்லியா போன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, லக்னோவில் மட்டும் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் பக்ஷி மற்றும் நதீம் அஷ்ரஃப் ஜெய்சி ஆகிய இருவரையும் உத்தேச வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com