டெல்லி இடைத்தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி

டெல்லி இடைத்தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி

டெல்லி இடைத்தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி
Published on

டெல்லி, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு 2 ஆம் இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

டெல்லியின் பவானா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்தர், 24,052 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளர் வேத் பிரதாஷை தோற்கடித்தார். கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், பனாஜி தொகுதியில் 4,803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனது பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அதே மாநிலத்தின் வல்பொய் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் பிரதாப் சிங் ரானே, 10,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பூமா பிரம்மானந்த ரெட்டி 27,466 வாக்குகள் வித்தியாசத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சில்பா மோகன் ரெட்டியை தோற்கடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com