திமுக கூட்டணியில் எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கீடு: ஆதித் தமிழர் பேரவை கட்சி

திமுக கூட்டணியில் எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கீடு: ஆதித் தமிழர் பேரவை கட்சி
திமுக கூட்டணியில் எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கீடு: ஆதித் தமிழர் பேரவை கட்சி

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதியமான் கட்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் மகுடன்சாவடியில் கவனிக்கத்தக்க பொதுக்கூட்டத்தை நடத்தியது. அருந்ததியர் சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி, அவர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு இயங்கும் கட்சியாக ஆதி தமிழர் பேரவை உள்ளது.

கொங்குப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக இது உள்ளதால் திமுக கூட்டணியில் இக்கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com